மஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு


மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மஹிந்த தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழுவை நியமிக்குமாறு உயர்நீதிமன்றில் மனுத்தால் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் புதிய அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கெதிராக மஹிந்த தரப்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரிக்கப்பட்டு நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதிமன்ற குழாமை நியமிக்குமாறு வலியுறுத்தி ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணியால் இன்று (வியாழக்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, தமது பதவிகளில் செயற்படவிடாது தடுக்கும் தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கமுடியாதென தெரிவித்தே மஹிந்த தரப்பு மனுத்தாக்கல் செய்துள்ளது. மனுவின் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் 122 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.