குஷியின் நம்பர் சென்டிமென்ட்!

ஒரு நடிகையின் தனித்துவமாக
பலவற்றைக் குறிப்பிடுவது வழக்கம். புதிதாக பாலிவுட்டில் காலடி எடுத்துவைத்திருக்கும் ஜான்வி கபூருக்கான தனித்துவம் என்னவென்று கேட்டால், இதுவரை அவர் கொடுத்த எந்த பேட்டியிலும் அவரது தாய் ஸ்ரீதேவியைப் பற்றிப் பேசாமல் இருந்ததில்லை. அதுபோல அடுத்ததாக சினிமாவுக்கு வரவிருக்கும் ஜான்வியின் தங்கை குஷி கபூர் எப்படி அவரது தாய் மீதான பாசத்தை வெளிக்காட்டப் போகிறார் எனக் காத்திருந்தது பாலிவுட் திரையுலகம். இதற்கான பதிலை சமீபத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கொடுத்திருக்கிறார் குஷி.
குஷியின் பிறந்தநாளான நவம்பர் 5(V), ஜான்வியின் பிறந்தநாளான மார்ச் 6(Vl), ஸ்ரீதேவியின் பிறந்தநாளான 13(Xlll) மற்றும் போனி கபூரின் பிறந்தநாளான நவம்பர் 11(Xl) ஆகிய எண்களை தனது இதயத்துக்கு இடது பக்கமாக பச்சை குத்தியிருக்கிறார் குஷி.

No comments

Powered by Blogger.