பிரதமர் ஒருபோதும் அரசியலமைப்பை மீற மாட்டார்

ஜனாதிபதி அரசியலமைப்பை மீறினாலும், பிரதமர் ஒருபோதும் அவ்வாறு செயற்பட மாட்டார் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன
தெரிவித்துள்ளார்.இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசாங்கத்தில் 30 அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்க முடியும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமருக்கு அரசியலமைப்பை மீற முடியாது. ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி செயற்பட்டாலும், பிரதமர் ஒருபோதும் அரசியலமைப்பை மீற மாட்டார்.

பிரதமர் இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சிறந்த கல்வியாளரான பிரதமர் அரசியலமைப்பை மீறி செயற்பட மாட்டார்” எனக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.