ரணில் ஆட்சியில் வடக்கில் பிரிவினைகள் மாத்திரமே சாத்தியமாகியது

ரணில் விக்ரமசிங்கவின் மூன்றரை வருட ஆட்சிக்காலத்தில் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இடையே பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டதே தவிர எவ்வித அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படவில்லை என வட. மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.


வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்கு முழு மூச்சோடு செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரம் போன்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அதே விவேகத்துடன் செயற்பட வேண்டும்.

கூட்டமைப்பு முழு மூச்சோடு ஆதரவளித்த ரணிலின் ஆட்சியின்போது, கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறும் வகையிலும், அவர்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளுமே முன்னெடுக்கப்பட்டது” என்றும் சுட்டிக்காட்டினார்.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.