கோயில் பிரசாதத்தை சாப்பிட்ட 11 பேர் பலி - காரணம் என்ன?

கர்நாடகாவில் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கும் பொதுவாக உணவு விஷமாவதற்கும் தொடர்பில்லை என்று தெரியவந்துள்ளது.


கர்நாடகாவின் அரசாங்க அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் பிபிசி பேசியபோது, இந்த உயிரிழப்பு சம்பவம் "வேண்டுமென்றே" திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதை போன்றுள்ளது என்று உறுதிபட தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த சமராஜநகர் மாவட்ட சுகாதாரத்துறையின் உயரதிகாரி ஒருவர், பொதுவாக உணவு விஷமாகி இறப்பவர்களை விட மிகவும் வேகமாக, இந்த கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

"இதுபோன்று உணவை சாப்பிட்டவர்கள் அடுத்த அரை மணிநேரத்திலோ அல்லது ஒரு மணிநேரத்திலோ மரணித்தால் அதற்கு உணவு நஞ்சானது காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த சம்பவத்தை பொறுத்தவரை ஆர்கனோ பாஸ்பரஸ் சேர்மங்கள் சேர்க்கப்பட்டதால் உயிரிழப்புகள் நேர்ந்திருக்கும் என்று கருதுகிறேன். அதுமட்டுமின்றி, ஆர்கனோ பாஸ்பரஸ் சேர்மங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டதன் விளைவாகத்தான் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று அம்மாவட்டத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலன் மருத்துவர் பிரசாத் பிபிசியிடம் கூறினார்.

உயிரிழப்பை உண்டாக்கிய உணவு மற்றும் உயிரிழந்தவர்களின் மாதிரிகள் தடயவியல் சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. "இது சமைக்கப்பட்ட உணவு என்பதால் முடிவுகள் தெரிவதற்கு இரண்டு, மூன்று தினங்கள் ஆகலாம்" என்று அவர் மேலும் கூறினார்.

பிரசாதத்தை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்கு வந்த கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவிடம் சூழ்நிலையை எடுத்துரைத்த மருத்துவர்கள், நேரடியாகவே உணவில் விஷம் கலக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தாங்கள் சந்தேகிப்பதாக கூறினர்.

கைபேசி பயன்படுத்தாமல் சாப்பிட்டால் இலவச உணவு - அசத்தும் உணவகம்
ஜொமாட்டோ ஊழியர் பணிநீக்கம்: காரணம் பசியா? பணிச்சுமையா?
"இந்த சம்பவத்தில் கோயில் நிர்வாக குழுவுக்குள்ளேயே இருவேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. எனினும், ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் குற்றச்சாட்டவில்லை. இதுகுறித்து உடனடியாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று சம்பவம் நடந்த கோயிலுக்கு அருகில் வசிக்கும் பள்ளி ஆசிரியரான சகாயராஜ் கூறுகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்களது குடியிருப்பை சேர்ந்தவர்களை பார்வையிட வந்த ஒருவர், "எங்களது குடியிருப்பு பகுதியை சேர்ந்த 27 பேர் இந்த மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சமைத்தவர்களும் மோசமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்" என்று கூறினார்.

இந்த சம்பத்தை தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நஞ்சாகியிருக்கலாம் என்று சுகாதார அதிகாரி ஒருவர் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

"துர்நாற்றம் வீசிய தக்காளி சாதம் எங்களுக்கு வழங்கப்பட்டது," என்று இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கங்கை நதியை காப்பாற்ற 40 நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சாது
5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதனின் கடைசி உணவு என்ன?
"அதனை உண்ணாமல் எறிந்துவிட்டவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். அதனை சாப்பிட்டவர்கள் வாந்தி எடுக்க தொடங்கி, வயிற்று வலியெனக் கூற தொடங்கினர்," என்று அவர் மேலும் கூறினார்.

வெள்ளிக்கிழமையன்று சிறப்பு நிகழ்வு நடைபெற்ற சாமராஜநகர் மாவட்டத்திலுள்ள மராம்மா கோயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோயிலை விட்டு செல்கையில், மத சடங்கில் அன்னதானமாக வழங்கப்படும் உணவாக இந்த தக்காளி சாதம் அனைவருக்கும் பரிமாறப்பட்டுள்ளது.

"இன்று (வெள்ளிக்கிழமை) இங்கு புனிதப்படுத்தும் சடங்கு நடைபெற்றது" என்று சம்பவத்தை நேரில் பார்த்த இன்னொரு நபர் கூறினார். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பக்கத்து கிராமங்களிலுள்ள மக்கள் பலரும் வந்திருந்தாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவ கௌடா உள்பட பலரும் இந்த சம்பவம் பற்றி சமூக ஊடக பதிவுகளில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

"இந்த சம்பவத்தில் தங்களின் உறவினர்களை இழந்துள்ள குடும்பங்கள், இந்த துன்பத்தை எதிர்கொள்ளும் பலமும், தைரியமும் கொள்ள வேண்டும்" என்று தேவ கௌடா பதிவிட்டுள்ளார்.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.