வூப்பெற்றால் ஒளிவிழாக்கவிதை!

அங்கங்கள் விளையாட
சங்கங்கள் கவிபாடும்
செந்தமிழ் வணக்கத்தை
வந்திருக்கும் நுமக்குச் சொல்லி


ஏதிலையாம் தமிழர் குலத்தில்
எந்தனையும் பிறக்க வைத்த
எம்பிரான் இயேசு பிறப்பை
என் வரியில் விளம்ப வந்தேன் !

கவிதை நான் எழுதுதற்கு
கம்பனே என் குருவானதால்
அவன் வளியில் நானுமிங்கே
அவைக்கடங்கி
அவையடக்கி
எம்பிரானைப் பாடப் போறேன்!

புலம் பெயர்ந்த இசுலேரரை மீட்க
பூன் தடியால் அன்றொருநாள்
மோசே பிளந்த செங்கடலை
மோட்டர் வைத்து இறைப்பது போல்
மேசியாவின் பிறப்பைப் பாட
மூடன் நானும் ஆசை கொண்டேன்!

பெருந்தகைகள், பாதிரிகள்,
பெருந்தலைகள், தமிழறிஞர்
பல பேரும் வந்திருப்பீர்! - இங்கே
பெருந்தகைகள், பாதிரிகள்
பெருந் தலைகள், தமிழறிஞர்
பலபேரும் வந்திருப்பீர் - சிலர்
பக்குவமாய் என் வரியில்
பிழை திருத்தக் காத்திருப்பீர்!!

பல பேரும் வந்திருக்கும்
பண்டிகைச் சபை தனிலே
#தமிழன்பன் கவிதையிலே
தவறு தேடவும் வந்திருக்கலாம் !

பிழையிருப்பின் பொறுத்தருள
பிரகாஷ் நான் கேட்க மாட்டேன்!
பிழையிருப்பின் பொறுத்தருள
பிரகாஷ் நான் கேட்க மாட்டேன்,
தமிழால் எனக் கிறை பயிற்றிய - என்
போதகரைப் போய்க் கேளுமென்பேன்!

இப்போதைக்கு
என் வரிகள்
விளம்புகிறேன்
விளங்கிக் கேளும் - சிலவேளை
புலம்பலாயும் விளங்கக் கூடும்!

விளம்புகிறேன் என் வரிகள்
விளங்கிக் கேளும் சில வேளை
புலம்பல் கவியாய் இருக்க கூடும்!

ஐந்து நாள் ஆண்டவனும்
அழகாய் இவ்வுலகு செய்தார்
ஆடவனைப் படைத்த நாளில்
அத்தனைக்கும் பெயர் சூட்டச் செய்தார்,
அவனுக்குத் துணைசமைக்க
"அவள்" என்றொருத்தி செய்தார்!

அவனுக்குத் துணைசமைக்க
"அவள்" என்றொருத்தி செய்தார்!

அவனும் அவளும் சேர்ந்து செய்த
ஆடவரும் அங்கையரும்
அவனி தன்னை தான் நிறைத்து
அத்தோடு பாவங்களும்
அளவிலாச் செய்திட வே,
நோவாவின் காலத்திலே
கர்மேகம் பொழிந்துலகில்
பாவங்கள் களைந்துலகை
பரமபிதா சுத்தம் செய்தார்!

அளவில்லாப் பாவங்கள்
அகிலத்தோர் செய்திட வே
நோவாவின் காலத்திலே
கார்மேகம் பொழிந்துலகில்
பாவங்கள் களைந்துலகை
பரமபிதா சுத்தம் செய்து,
மழையாலே நான் உலகை
மறுபடியும் அழிப்பதில்லையென
வானத்தின் மேகமிடைதன்
வண்ணமய வில்லை வைத்தார்!

பாவிமக்காள் திருந்தவில்லை!
பாவங்களையும் களையவில்லை!
பாவிமக்காள் திருந்தவில்லை,
பாவங்களையும் கைளையவில்லை...
பாவத்தின் சம்பளம்
மரணம் என்றும் உணரவில்லை!

மரணம் எத்துனை கொடுமை என
மதிகெட்ட மனிதர்க்குனர்த்தத்தான்
மனுமகன் இயேசு இந்த
மண்ணுலகில் பிறந்தாரோ!

மரணம் எத்துனை கொடுமை யென எம்
மதிகெட்ட மனிதகுலம் அறிந்திடத்தான்
மனுமகனாம் இயேசு இந்த
மண்ணுலகில் பிறந்தாரோ?!!

சாவென்பது
சாதானம்!

சாவென்பது
சாதாரனம்
என்றென்னும் மாந்தருக்கும்
பிறந்த எல்லாம் என்றோ ஒர் நாள்
இறந்தாக வேண்டுமென
இடித்துரைக்கும் இளவலர்க்கும்
புரிந்திடத்தான் செய விரும்பி
பரமபிதா புத்திரனார்
பனியிலே பிறந்தாரே?!

இறையியலின் கூற்றுப்படி
இயலா வாழ்வை வாழ்வதற்கென்போர்,
இறையியலின் கூற்றுப்படி
இயலா வாழ்வை வாழ்வதற்கென்போர்
இதயத்தில் உனர்த்திடவே
இயேசு பிரான் பிறந்தாரே?!

எம்பிரானின் இறப்பின் கொடுமை
எல்லோரும் அறிவோம் மக்காள்!

எம்பிரானின் இறப்பின் கொடுமை
எல்லோருமே அறிவோம் மக்காள்,
அன்பர் இயேசு பிறப்பில் கொடுமை
ஆலோசித்துப் பார்த்ததுண்டோ?

அன்பர் இயேசு பிறப்பில் கொடுமை
ஆலோசித்துப் பார்த்ததுண்டோ??!!

தெரிந்த சில புள்ளிகளை
தெளிவுபடுத்த யான் முயன்றேன்!
எனக்கு,
தெரிந்த சில புள்ளிகளை
தெளிவுபடுத்த நான் முயன்றேன்,
துல்லியமாய்க் கேட்டுப் பாரும்
புல்லரிக்கும் தேகத்திலே!!

உரோமானியப் பேரரசின்
உருப்படிகள் கணக்கெடுப்பு!
நசரேத்திலிருந்து பெத்தலகேமுக்கு
நடை நடந்தே செல்ல வேண்டும்.

காரில்லை, பஸ்சில்லை - நாம்
ஊருலாப்பு போவது போல்
பிளைட்டோ ரெயினோ அப்போதில்லை!
கலிலேயா நாடி ருந்து யூதேயா நாட்டுக்கு
கால்நடைப் பயணம்!
கர்ப்பினிப் பெண் வேறு !

காரில்லை, பஸ்சில்லை - நாம்
ஊருலாப்பு போவது போல்
பிளைட்டோ ரெயினோ அப்போதில்லை,
கலிலேயேயா நாட்டிலிருந்து யூதேயா நாட்டுக்கு
கர்ப்பிணிப பெண்ணோடு கால்நடையாய்ப் பயணம்!

பாவம் அந்த யோசேப்பு - என்ன
பாடுபட்டிருக்கும் அவர் மனசு!

பாவம் அந்த யோசேப்பு என்ன
பாடுபட்டிருக்கும் அவர் மனசு
என்று நாம் எப்போதேனும்
எண்ணிப்பார்த்து நின்றதுண்டா?

நிறை மாதக் கர்ப்பினி மாதா
நீட்டி மூச்சு வாங்கையிலே
உள்ளிருந்த குழந்தை யேசு
உள்ளம் எப்படி உழன்றிருக்கும்?

நிறை மாதக் கர்ப்பினி மாதா
நீட்டி மூச்சு வாங்கையிலே
உள்ளிருந்த குழந்தை யேசு
உள்ளம் எப்படி உழன்றிருக்கும்? -
ஒரு கணமேனும் நாம்
உள்ளத்தில் நினைத்ததுண்டா?

குழப்படிக் குழந்தைகளை நாம்
கழுதை என்று திட்டுவதுண்டு!

குழப்படிக் குழந்தைகளை நாம்
கழுதை என்று திட்டுவதுண்டு
குழந்தைகளே கேழுங்கள்
கழுதையொன்றும் குறைந்ததல்ல!

கடவுளாம் நாம் இயேசுவைத் தன்
கருவோடு சுமந்த தாயை
சுமந்து தூரம் கடந்த தந்த
சுமாரான கழுதை தான்!

கழுதையொன்றும் குறைந்ததல்ல,
கடவுளாம் நாம் இயேசுவைத் தன்
கருவோடு சுமந்த தாயை
சுமந்து தூரம் கடந்த தந்த
சுமாரான கழுதை தான்!

பெத்லகேமை அடைந்த போது
பேறு வலியில் துடித்தார் மாதா!

பெத்லகேமை அடைந்த போது
பேறு வலியில் துடித்தார் மாதா!
ஆசுப்பத்திரி இல்லாக் காலம்!
அந்தகார இருள் சூழ
அறைகள் தேடி அலைந்தார் யோசேப்!

பேறு வலிக் கினையாய் இந்த
பாரில் வேறு வலி இருப்பின்
அதையும் கடந்த
அதிக வலியை
அனுபவித்தவர் யோசேப் என்பேன்!

பேறு வலிக் கினையாய்,  வேறு வலி இருப்பின் கூட
அதையும் கடந்த அதிக வலியை அனுபவித்தவர் யோசேப் என்பேன்!

விரும்புவானோ எந்த அப்பன்
வீதியில் தன் குழந்தை பிறப்பை!

விரும்புவானோ எந்த அப்பன்
வீதியில் தன் குழந்தை பிறப்பை!

நான்கு புரவித்தேரில் ஏறி
நாடான்ட தாவீதின் வம்ச மகன்
தன் குழந்தை பிறப்பிற்காக
தேடி நின்றான் ஒரு குடிலை!

மன்னர் குடிக் குழந்தை பிறக்க
மாட்டுக்கொட்டிலா கிடைக் வேண்டும்?

நான்கு புரவித்தேரில் ஏறி
நாடான்ட தாவீதின் குலத்தில்
குழந்தை ஒன்று பிறக்க மாட்டு
குடில் தானா கிடைக் வேண்டும்?

சுந்தரமாய் உலகு படைத்தவர்
சுதன்வந்து பிறப்பதற்கு
சாணி நாற்றம் வீசுகின்ற
சாவடி தான் தொட்டிலாச்சோ?

இத்தனையும் தாங்கி
இந்த உலகில் மீட்பர் பிறந்த போது
வாண சாஸ்திரியர் வந்து
வணங்கி யவரைப் பணிந்த போது
நாடாண்ட மன்னனுக்குள்
நமைச்சல் ஏன் எடுத்ததன்று ?

இத்தனையும் தாங்கி
இந்த உலகில் மீட்பர் பிறந்த போது,
நாடாண்ட மன்னனுக்குள்
நமைச்சல் ஏன் எடுத்ததன்று ?

தனக்கு ஆப்பு வந்ததென்று
தனக்குள் நினைத்த ஏரோது
தனக்கு ஆப்பு வந்ததென்று
தனக்குள் நினைத்த ஏரோது
இரண்டு வயதாகா குழந்தையெல்லாம்
இறக்கச் செய்து மன மகிழ்ந்தான்!

ராகேலின் குழந்தைகள் இறப்பில்
ராமாவே குழறியழுதது!

பிறக்கும் போது குழந்தைகள்
கீச்சிட்டழுவதுண்டு - ஆனால்,
பிறந்த குழந்தைகள்
இறந்து போதல் கண்டொரு
நாடே அழுததென்று
ராகேலின் குழந்தைகள் இறப்பில்
ராமாவே குழறியழுததாய்
வேதாகமம் தன் வரிகள் சொல்லுது !

இத்தக் கொலைக் களத்தில் தப்பிக்க
இன்னுமொரு இடப்பெயர்வு
இப்படி இன்னும் பல துன்பங்கள்
இருந்தது இயேசு பிறப்பில்!

பல துன்பங்கள் இருந்தது
பாலகன் இயேசு பிறப்பில்!
பாவிகள் நாம் என்றேனும் - எண்ணிப்
பார்த்ததுண்டா?

பண்டிகையாய்க் கொண்டாடுகிறோம்
பாலகன் இயேசு பிறப்பை !
மகிழ்ச்சி!

பண்டிகையாய்க் கொண்டாடுகிறோம்
பாலகன் இயேசு பிறப்பை !
அது மகிழ்ச்சி தான்!

புத்தாடை புனைந்து கொண்டு
புதுப் பாடல் கட்டுகிறோம்! - ஆனால்,
பூவுலகைப் படைத்தவரின்
புத்திரனார் உனர்த்திச் சென்ற,
மார்கத்தை மறந்து விட்டு
மதம் பிடித்து அலைகின்றோம் !

கிரிஸ்த்துமஸ்சைக் கொண்டாடும் - என் சக
கிருத்துவரே கொஞ்சம் கேழும்!
கிரிஸ்த்தவம் மதம் அல்ல!
கிறிஸ்த்துவைப் பின்பற்றும் மார்க்கம் தன்னே கிறிஸ்தவம்!

கிறிஸ்த்து பிறப்பைக் கொண்டாடி
கிறிஸ்த்து வைப் பின்பற்றும் யாம்
அவர் சொல்லி வைத்த ஒரு
அன்புக் கட்டளை தன்னையும்
அறத்தோடு கடைப் பிடிப்போம்

உன்னைப்போல் பிறனையும் நேசி

உனனைப் போல் பிறனையும் நேசி
என்றுரைத்தார் இயேசு நாதர்!

என்னைப் போல் எல்லோரையும்
என்றும் நான் நேசிக்க
என் இறைவனிடம் வரம் கேட்டு
உங்களைப்போல் என்னையும்
உளமார நேசியுங்கள் என
உங்களையும் கேட்டுக் கொண்டு

உன்னைப்போல் பிறனையும் நேசியென
உரைத்த நேசர் இயேசுவிடம்
என்னைப் போல் எல்லோரையும்
என்றும் நான் நேசிக்க வரம் கேட்டு
உங்களைப்போல் என்னையும்
உளமார நேசியுங்கள் என
உங்களையும் கேட்டுக் கொண்டு

இத்தோடென் வரிகளுக்கு
இடுகின்றேன் வரம்பு.

நல்லாயன் இயேசுநாமத்திலனைவருக்கும்
நத்தார் வாழ்த்துக்கள்!

நன்றி,
வணக்கம்!
- தமிழன்பன்  -

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.