முன்னாள் ஆஸி. கேப்டனிடமிருந்து ஒர் அரிய புகழாரம்

ஆஸ்திரேலிய அணி பவுலிங் சாதகப் பிட்சில் முதல் இன்னிங்சில் 326 ரன்களை எடுத்த பிறகு இந்திய தொடர்க்க வீரர்களான முரளி விஜய், ராகுல் ஸ்டம்புகளை முறையே ஸ்டார்க், ஹேசில்வுட் பெயர்க்க இந்திய அணி 8/2 என்று சரிந்தது.


அந்த அதிர்ச்சித் தொடக்கத்துக்குப் பிறகு புஜாரா, கோலி, ரஹானே மூவரும் கூட்டணி அமைத்து 2ம் நாள் ஆட்ட முடிவில் 172/3 என்று ஓரளவுக்கு வலுவான நிலையை ஏற்படுத்தியதோடு, ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு நாளை ஒர் அச்சத்தைக் கொடுத்துள்ளனர்.

ரஹானே, கோலி இணைந்து ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் சேர்த்துள்ளனர்.

விராட் கோலி இறங்கியது முதல் செம பாசிட்டிவ்வாக ஆடினார், உறுதியற்ற தன்மையே இல்லை, மிகப்பிரமாதமாக 3 பவுண்டரிகளை ஹேசில்வுட்டை ஆடினார், பவுன்ஸ் பிட்சில் மைதானத்தின் மிட் ஆன், மிட் ஆஃப், நேர் பகுதிகளில் ஷாட்களை ஆடி மிகப்பிரமாதமான ஒரு டெஸ்ட் இன்னிங்ஸை ஆடிவருகிறார் விராட் கோலி.
மாறாக ரஹானே தனக்குக் கொடுத்த ஷார்ட் பிட்ச் சோதனையை எதிர்த்தாக்குதல் நடத்தி முறியடித்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா இன்று ஆடிய போராட்ட குணத்துதை மிக உயர்வாகப் பாராட்டுகிறேன். அதுவும் 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில். விராட் கோலி நம்ப முடியாத ஆட்டம், ரஹானே விதிவிலக்கான ஆட்டம்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மற்றொரு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ், தன் ட்விட்டரில், "இன்று பிட்ச் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் ரஹானேவும் கோலியும் எவ்வளவு நன்றாக ஆடிவிட்டார்கள்!! நம் பேட்ஸ்மென்கள் பார்க்க வேண்டும். தேர்ட்மேனில் கேட்ச் கொடுக்கவில்லை, தேர்ட்மேன் நோக்கி முட்டாள்தனமான ஷாட்கள் இல்லை. அல்லது லயனை லேட் கட்டுகளும் ஆடவில்லை. பழைய பாணி நல்ல கட்டுக்கோப்புடன் ஆடினர்" என்று புகழாரம் சூட்டினார்.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.