மைத்திரியின் முடிவு



ரணில் விக்ரமசிங்கவை தற்போதும் பிரதமராக ஏற்றுக் கொள்ள தான் தயார் இல்லை எனவும்     நாடாளுமன்ற கோட்பாட்டிற்கமைவாகவும்  ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலுமே  இம்முடிவிற்குச் சம்மதித்ததாக  அரசதலைவா் மைத்திபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.


ரணில் விக்ரமசிங்கவின்  பிரதமா்   நியமனத்தின்  பின்னர் ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களும் கையொப்பம் இட்டாலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று கூறியிருந்தேன். அது எனது தனிப்பட்ட அரசியல் கருத்தாகும். அதே கருத்துடன் தாம் இன்றும் இருப்பதாகவும்     பிரதமர் ஒருவரை தீர்மானிப்பதற்கோ அல்லது நியமிப்பதற்கோ அரசியல் அமைப்புக்கு இணங்க நாடாளுமன்றத்திற்கோ நீதிமன்றத்திற்கோ எதுவித அதிகாரமும் இல்லை. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு மட்டுமே இந்த அதிகாரம் உள்ளது எனவும்
தாய்நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் நோக்கிலேயே சில முக்கிய தீர்மானங்களை எடுத்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.


அரசியலமைப்பை மீறிச் செயற்பட வேண்டும் என்ற எண்ணம் தம்மிடம் ஒருபோதும் இருந்ததில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போதுள்ள அரசியல் பிரச்சனைக்கு ஒரேயொரு சிறந்த தீர்வு பொதுத் தேர்தல் ஆகும் என்றும்   அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை ஒரு நல்ல விடயமாயினும் அது அரசியல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தியுள்ளதாகவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.

 #Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.