மீள் ஆரம்பிப்பில் தடைப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம்!
களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் முன்னெடுக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிப் பாதுகாப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது குறித்த பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் முன்னெடுக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைக்கும் பணி அப்பகுதி கமநல அமைப்பினரின் தலையீட்டினால் தடைப்பட்டிருந்தது.
களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைக்கு அன்றாடம் வரும் மக்களின் துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் பாதுகாப்பான தரிப்பிடமின்றி வெட்டவெளிகளில் வைக்கப்படுகின்றது.
இதனால் பறவைகளின் எச்சங்கள், வெயில், மழை போன்றவற்றின் காரணமாக குறித்த வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இந் நிலையில் இதற்கு கட்டணமும் அறவிடப்படுகின்றன.
இதனால் தினமும் பொதுச் சந்தைக்கு வரும் நுகர்வோர்கள், வியாபாரிகள் என பலரும் பலத்த சிரமத்திற்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதற்கான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பது பிரதேச சபையினுடைய கடமையாகும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
#Batticola

.jpeg
)

கருத்துகள் இல்லை