தொழிலாளர்களின் பிரச்சினையை யதார்த்த பூர்வமாக அணுகவேண்டும்
தொழிலாளர்களின் பிரச்சினையை
அரசாங்கம் யதார்த்த பூர்வமாக அணுகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக இடம்பெற்றுவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை இன்று (புதன்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன், அரசாங்கமும் ஒரு தரப்பாக இணைந்து கொண்டு இந்த தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும்.
இவ்விடயத்தில் அரசாங்கம் யதார்த்தபூர்வமாக அணுகி தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவேண்டும்.
அரசாங்கம் இவ்விடயத்தில் தனது பங்களிப்பினை வழங்குவதை நாம் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் பல அழுத்தங்களைப் பிரயோகித்து உறுதிசெய்வோம்.
மேலும் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தரப்பினர் என்ன விடயங்களை தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் முன்னெடுக்க வேண்டும் என எமக்கு வெளிப்படுத்த வேண்டும்” என வேலுகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

.jpeg
)

கருத்துகள் இல்லை