சக்திமிகுந்த துப்பாக்கி இணைப்புகளுக்கு தடை

 லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தப்பட்டது போன்ற சக்திமிகுந்த துப்பாக்கி
இணைப்புகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதன்படி அந்த இணைப்புகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு அல்லது அழிப்பதற்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அக்காலப்பகுதிக்குள் அதன் பாவனையை உரிமையாளர்கள் பதிவு செய்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புளோரிடா உயர்நிலை பாடசாலையில் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற கொடூர துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து நிறுவப்பட்ட பாடசாலை பாதுகாப்பு குழுவுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி ட்ரம்ப் இந்த அறிவிப்பை விடுத்தார்.
இத்தடைக்கான புதிய ஒழுங்குவிதிகளை ஏற்படுத்துவது தொடர்பான செயல்முறைகள் நிறைவடைந்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பதில் சட்டமா அதிபர் கூறுகையில், அரை தானியங்கி துப்பாக்கிகளில் இயந்திர துப்பாக்கி பாகங்களை இணைப்பது சட்டவிரோதமானது. இந்நிலையில், கூட்டாட்சி சட்டத்திற்கு அமைய இயந்திர துப்பாக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.