நக்கீரன் ஊழியர்களுக்கு முன் ஜாமீன்!

ஆளுநருக்கு எதிராகச் செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் நக்கீரன் ஊழியர்கள்
34பேருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி குறித்துத் தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் தொடர்பாக, ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் நக்கீரன் ஆசிரியர் கோபால் அக்டோபர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவால் அன்று மாலையே விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நக்கீரன் இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்ட 34 நக்கீரன் ஊழியர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இவர்கள் அனைவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை இன்று (டிசம்பர் 18) விசாரித்த நீதிபதி இளந்திரையன், 34 பேருக்கும் நிபந்தனை எதுவும் விதிக்காமல், முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
கடந்த நவம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, டிசம்பர் 21ஆம் தேதி வரை இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.