தஞ்சையை அதிர வைத்த திடீர் ஜெ. சிலை!
நேற்று இல்லாத மாற்றம் என்னது என்ற பாடலைப் போல தஞ்சை நகர வாசிகளை இன்று அதிர வைத்துவிட்டது
திடீரென முளைத்த ஜெயலலிதா சிலை.
திடீரென முளைத்த ஜெயலலிதா சிலை.
தஞ்சை நகரத்தில் ரயில்நிலையம் எதிரே ஏற்கனவே எம்ஜிஆர் சிலை இருக்கிறது. இது சில நாட்களாக மூடப்பட்டிருந்தது. புனரமைக்கிறார்கள் போல என்று நகர வாசிகள் நினைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று (டிசம்பர் 18) அதிகாலையில் வாக்கிங் போன மக்களுக்கு அதிர்ச்சி. காரணம் எம்ஜிஆர் சிலைக்குப் பக்கத்தில் ஜெயலலிதா சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது.
விடிந்ததும் இந்த அதிர்ச்சி அரசு அதிகாரிகளுக்கும் ஏற்பட்டது. காரணம் புதிய ஜெ. சிலை நிறுவுவது பற்றி மாவட்ட நிர்வாகத்திடமோ, வருவாய் துறையிடமோ எவ்வித அனுமதியும் வாங்கவில்லை என்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா சிலையை எப்படி அப்புறப்படுத்துவது என்று அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள்.
தஞ்சையில் இருக்கும் எதிர்க்கட்சிகளோ, சமூக அமைப்புகளோ இதுவரை இந்த சிலை பற்றி அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கவில்லை. அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள்தான் இந்த சிலையை வைத்திருக்கிறார்களாம்.

.jpeg
)





கருத்துகள் இல்லை