இங்கு இட்லி விற்கப்படும்: அப்டேட் குமாரு
இப்படித்தான், வந்தா மொத்தமா வருவாய்ங்க. இல்லைன்னா யாருமே
இருக்க மாட்டாய்ங்க. வெறும் இட்லி வாங்கிட்டு வரச்சொல்லி சுந்தரராஜன், செந்தில் கிட்ட நூறு ரூவா கொடுத்தது தான் இன்னைக்கு வரைக்கும் தமிழ்நாட்டோட ஆகச்சிறந்த இட்லி காமெடி. ஆனா, அதை ஒரே நாள்ல பிரேக் பண்ணி ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சத்துக்கு இட்லி சாப்பிட்டார்னு சொன்னதை மக்களால ஜீரணிக்கவே முடியாத நிலைல, மோடி வந்து கிச்சு கிச்சு மூட்டுறார். என்னவாம் தெரியுமா, வீடு கட்டித் தரப் போராறாம். இந்த மேட்டரை ஒரு பிஜெபி நண்பர்கிட்ட கேட்டேன், என்னயா உங்காளு வீடு கட்டித் தரப் போறாராமே, வாட் மேட்டருன்னேன். ‘அட ஆமாய்யா, 15 லட்சம் பணம் கொடுக்கும்போது அதை வைக்க இடம் வேணாமா உனக்கு. அதுக்குத்தான் வீடு. அடுத்து ஆளுக்கு ஒரு மஞ்சப்பை கொடுப்பாங்க. கியூவுல நின்னு பணம் வாங்குனா கூட்ட நெரிசல் ஏற்படும்னு வீட்டுக்கே பைப் போட்டு, பணம் அதுல கொட்றாப்ல டிசைன் பண்ணப்போறோம்’ அப்டினு பேசிக்கிட்டே இருந்தவரை, சட்டுனு கீழ்ப்பாக்கத்துல இருந்து வந்த வண்டி ஏத்திட்டு போயிருச்சு. காப்பாத்திருவாங்களா, இல்லை முக்குச்சந்துல போட்றுவாங்களான்னு தெரில. நான் போய் பாத்துட்டு வர்றேன். நீங்க அப்டேட்டைப் படிச்சிட்டு நான் கேக்குற கேள்விக்கு பதில் கண்டுபுடிங்க.
75 நாட்களுக்கு 1.17 கோடிக்கு இட்லி சாப்பிட்டால், ஒரு இட்லியின் விலை என்ன?
உங்கள் அன்பான பதில்களை Entertainment@minnambalam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்.
Arunan Kathiresan
ஈழத்தமிழர் பற்றி திடீர் கரிசனம் பொன்னாருக்கும் தமிழிசைக்கும்!
சு சுவாமியை தலைவராகவும், ராஜபக்சேவுக்கு வரவேற்பு தந்த
மோடியை பிரதமராகவும் வைத்துகொண்டு ஈழத்தமிழர் பற்றி
இவர்கள் பேசலாமோ?
Kala
தமிழ் நன்றாகத் தெரிந்தவர்கள் கூட ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் போது அழகுத் தமிழைப் புறக்கணித்து விட்டு ஆங்கிலத்தையே பயன்படுத்துகிறோம்.இப்படியே போனால் தமிழ் மெல்லச் சாகும்.
இந்நிலை வர விடக் கூடாது.எவ்விடத்தும் இயன்ற வரை தமிழ் மொழியையே பயன்படுத்துவோம்.!

lαvαnчα°™ .м
நிஜத்தை ஏன் மறுக்கிறாய் என்கிறார்கள்
நான் எப்படி.சொல்வேன் நிஜத்தில் நீ இல்லை நேற்றில் தான் நீ இருந்தாய் என்று!!
சில்லற இல்லபா
கூட பொறந்தவன அண்ணா’னு சொல்றது இல்ல, இங்குட்டு பாக்கறவன பூரா அண்ணா நொண்ணா’னுட்டு சுத்துறது ஓடுங்க அந்த பக்கம்.....
எனக்கொரு டவுட்டு
பேர் அண்ட் லவ்லி தராத முகப்பொலிவை தந்து விடுகிறது விவோ ஓப்போ கேமரா போன்கள்..!!

உள்ளூராட்டக்காரன்
விழா மேடையில் தூங்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்- செய்தி
நம்ம அமைச்சர்களுக்கு ரெண்டே வேலை தான்...
ஒன்னு தூங்குறது, இல்லேன்னா பி.ஜே.பி.யை தாங்குறது..!
ஜோக்கர்...
ஒரு மனிதரை பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசி கேட்கும் இடம்
"இழவு வீடு"
River
3 சதவீதமே உள்ள எங்களை பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள் - ராஜாஜி.
திருவிழாவில் கும்பல் அதிகமாக உள்ளது, கையில் பணம் உள்ளதால் அதை திரும்ப திரும்ப பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம்.
3000 பேர் கலந்து கொண்டாலும் அதில் 3 பேர் தான் முடிச்சவிக்கியா இருப்பான் - தந்தை பெரியார்

shyam tharasu
ராஜ்பவன் பாதுகாப்புப் போலீஸ்காரர் வீட்டிலேயே துப்பாக்கி, கையெறி குண்டுகள் மற்றும் தோட்டா பறிமுதல்!
குமார் என்ற ரிசர்வ் போலீஸ்காரர் ராஜ்பவன் காவல் பணியில் ஈடுபட்டு வந்தார். விதிமுறைகளை மீறி அவர் ஆயுதங்களை வீட்டிலேயே வைத்திருந்திருக்கிறார். கவர்னர் பாதுகாப்பிலேயே குளறுபடியா?
SKP KARUNA
நல்லா கொடிகட்டிப் பறந்த பழைய ஸ்டார் நடிகைக்கு, துக்கடா ரோல் கொடுத்து நல்ல ஹெவி பேமெண்ட் வாங்கித் தருவாங்க சில ஹீரோக்கள்! அதைப் போலிருக்கு மோஹித் ஷர்மாவுக்கு 5 கோடி கொடுத்து ஏலம் எடுத்தது.
ஆல்தோட்டபூபதி
என்னது ரெண்டு பிளேயர் தான் வாங்க முடியுமா? அந்த நிலைமையில இவனையா எடுப்பானுங்க? ரைட்டு..
கோழியின் கிறுக்கல்!!
மனைவியிடம் இந்திய அணி போலவே நடந்து கொள்ளுங்கள்!!
வெல்வது போல் வேடமிட்டு தோற்று விடுதல் நலம்!!!

Vaishali S
கன்னத்தில் முத்தமிட சென்றால் தடுத்து
விடுவான் அவனின் உதடுகளால்...
தேவதை
தேவையில்லாத போது எல்லாம்
நமக்கு கிடைத்திருக்கும்...
தேவையுள்ளபோது கிடைத்த
எதுவும் நம் அருகில் இருப்பதில்லை!!
Syed Khaleel
தமிழ்நாட்டு தவளைகளுக்கு மோடியை பற்றி என்ன தெரியும் @ கரு.நாகராஜன்
ஆமா யார்ணே இது.. கரு நாகராஜன்..?
இவரைத் தெரில.. இவர்தான் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்..

அஜ்மல் அரசை
எடப்பாடியோட கடைசி ஆசை அப்போலோவுல போய் அந்த காஸ்ட்லியான இட்லியை சாப்பிடுவதாகத்தான் இருக்கும்.
சிவா
சென்னையில் ராகுல் காந்தியை கண்டித்து பாஜக போராட்டம் 15 பேர் கைது!!
என்னடா சொல்றீங்க பாஜகவில 15 பேரா..???
கோழியின் கிறுக்கல்!!
உனக்கான தண்டனையை முடிவு செய்து விட்டேன்!!
உன் தவறுக்காக தான் காத்திருக்கிறேன்!!!
amudu
விழா மேடையில் தூங்கி விழுந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்- செய்தி.
மேடையில் முழிச்சிட்டு இருந்தால், ஏதாவது ஏடாகூடமா பேசிவிடுகிறோம்ன்னு தூங்கிட்டாரு போல.
Newton
உலகின் விலையுயர்ந்த உணவகம் அப்பல்லோவில் உள்ளது.
இன்று ஒரு தகவல்.
சக்திமான்
125 கோடி மக்களுக்கு 1250 கோடி வீடுகள் கட்டித்தருவோம் - மோடி..
நீங்க குடுத்த அந்த 15 லட்சத்தவே எப்படி செலவு பண்றதுனு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம், அதுக்குள்ள சொந்த வீடா போதும்.

கவின்தமிழ்
சொர்க்க வாசலுக்குள்ள போயிட்டு வந்தீயே பாவம் போயிடுச்சுமா..!! போயிடுச்சு போயிடுச்சு.. அப்புறம் எதுக்கு வருசம் வருசம் போற.. ஒரு வருசம் கூட பாவம் பண்ணாம இருக்க முடியலயோ...!!!!
அபிவீரன்
அப்போல்லோவில் ஜெயலலிதா தங்கியிருந்த 75 நாட்களுக்கான உணவு செலவு மட்டும் ரூபாய் 1.17 கோடி என தகவல்.
பகல் கொள்ளை கேள்வி பட்டிருக்கேன். இது என்னடா இட்லி கொள்ளையா இருக்கு
சத்துகுட்டி
அண்ணே! 4 இட்லி பார்சல்!

.jpeg
)





கருத்துகள் இல்லை