தமிழீழம் முல்லைத்தீவுக் கடற்கரையில் கரையொதுங்கிய தமிழீழத் தேசியக் கொடி…
முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடிகள் இரண்டு கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு கொடிகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கடல் அலை சீற்றத்தினால் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இரண்டு கொடிகளும் புதிய கொடிகளாகவே கணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செல்வபுரம் கடற்கரைப்பகுதியில் கடல் சீற்றம் காரணமாக கடலுக்குள் புதைந்த கழிவு பொருட்கள் கரையொதுங்கிய வண்ணமுள்ளன.
காலணிகள்,உடைகள்,இரும்புகள்,உரபைகள் என பல பொருட்கள் கரையொதுங்கி வருவதுடன், கடல் அட்டைகளும் கரை ஒதுங்கியுள்ளன.
இந்நிலையில் பிரதேச மீனவர்கள் கடல் அட்டைகளை பொறுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை இரண்டு அடி நீளமுள்ள புலிக்கொடி ஒன்று கரையொதுங்கியதையடுத்து, தகவல் அறிந்து குறித்த இடத்திற்கு வந்த படைபுலனாய்வாளர்கள் அதனை எடுத்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் காலை 9.00 மணியளவில் மீண்டும் நான்கு அடி நீளமுடைய மற்றுமொறு புலிக்கொடி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் அந்த கொடியினையெடுத்து சென்றுள்ளதுடன் படைபுலனாய்வாளர்கள் எடுத்துச் சென்ற கொடியினையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






.jpeg
)





கருத்துகள் இல்லை