முன்னர் எதிர்கட்சி பாத்திரத்தை கொண்டு செல்வதில் பிரச்சனை இல்லை
எதிர்கட்சி பாத்திரத்தை கொண்டு செல்வதில் தமக்கு பிரச்சனை இல்லை என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் இன்று(செவ்வாய்கிழமை) நண்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது, நாடாளுமன்ற பதவிநிலைகள் குறித்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார். இந்தநிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து கருத்து வெளியிடும் போதே எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் அரச தரப்பிலேயே இருக்கின்றனர். இதனால் எதிர்கட்சி பாத்திரத்தைக் கொண்டுச் செல்வதில் எனக்கு பிரச்சினை இல்லை. அவர்கள் அரசாங்கத்தின் சார்ப்பில் செயற்படுகிறார்கள். அவர்களை அந்த மன நிலையிலிருந்து மாற்றவே நான் பாடுபடுகிறேன். அவர்களை மாற்றி உண்மையான எதிர்க்கட்சியாக செயற்பட வைக்க முயற்சிப்பேன்.” என தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை