விழிக்குள் விழுந்த துரும்பு அவன்

நிலா நாளிகையின் பொழுதொன்றில்
அடர் மௌனங்களைக்
கிழித்தெறிந்துகொண்டு
ஓவென்று சத்தமிட்டு அழுகின்றது
மீகாமனின் எச்ச நினைவுகள்

ஏதேதோ நிகழ்வுகளின் போதும்
என் சந்தோஷங்களை மறுபடியும் மீட்டெடுக்கும் தோரணயில் ராகஸ்வரங்களுடன் பயணிப்பதாய் என்னை
பழக்கப்படுத்திக்கொண்டிருக்கிறேன்
ராகஸ்வர தாளலயத்திலும் கூட தகதிமிபாடி
தகிக்கும் தணலாய் கொதிக்க காத்திருக்கிறது அவன் மிச்சசொச்சங்கள்

யாருமறியா தனித்தீவொன்றிற்கு பறக்கப்போகிறேன்
என் இறக்கைகளை
அவன் மூச்சுக்காற்றுபபடாத
இருட்டறையொன்றில் நூற்றுகொண்டிருக்க
என் நுதலிற்கு சொந்தக்காரி நீயடியென
எனக்கேயல்லாத அவனது பொய் வார்த்தைகள் என் இறக்கைகளை குடைந்து வந்து மௌனக்குதறல்களை பரிசளிக்கின்றது

வெளிர் தேசமொன்றின் வெப்பக்காற்றை நான் சுவாசித்து
மேனியெங்கும் உலர்ந்துவிட்டது
எனக்கான பசுமை நுதலை என்னிடம் கொடுத்துவிடு மீகாமா
ஒரேயொரு முறை மட்டுமேயான என் வாழ்வை நான் வாழ வேண்டும்

யாவும் கற்பனை
எட்வீனா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.