யாழில் குடும்பஸ்தரை கடத்த முற்பட்ட நால்வர் கைது

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்பஸ்தரை கடத்த முற்பட்ட நால்வர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டு பளை பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.


வடமராட்சி கிழக்கு முள்ளியானையை சோ்ந்த சி.நமசிவாயம் (வயது-60) என்பவரை இன்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.

காா் மற்றும் தளபாடங்கள் விற்பனை செய்யும் வாகனம் ஒன்றில் வந்த   7 போ் கொண்ட குழுவினரே இவ்வாறு  கடத்த முற்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அவதானித்த அப்பகுதி இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் கடத்தல் குழுவினரை சுமாா் 10 கிலோ மீற்றா் தூரம்வரை துரத்தி சென்று, இயக்கச்சி வளைவு பகுதியில் வைத்து மடக்கி பிடித்து நையப்புடைத்துள்ளனா்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த பளை பொலிஸாா் நான்கு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த நால்வரும், கடத்தப்பட்டவர் தமக்கு பல லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவேண்டும் எனவும், அதனாலேயே அவரை தாம் கடத்த முற்பட்டதாக தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இக்கடத்தல் குழுவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவர், இயக்கச்சி இராணுவ முகாமை சோ்ந்த இராணுவ  வீரர்கள்  என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொழும்பிலிருந்து வந்த பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்த ஒருவரே இராணுவ வீரர்களை  அழைத்துச் சென்று குடும்பஸ்தரை கடத்த முற்பட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரும் பளே பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், தப்பிச் சேன்ற ஏனைய மூவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.