அன்று பெண்ணைக் கடத்திய எம்பி இன்று கையடக்க தொலைபேசி கடத்தினார்

20.12.2018 காலை 11 மணியளவில் பரந்தன் நகரில் உள்ள கரைச்சி வடக்கு ப.நோ.கூட்டுறவுச் சங்கத்துக்குச்
சொந்தமான சிற்றுண்டிச் சாலையில் கிளிநொச்சியைச் சேர்ந்த தினேஸ் என்பவர் தேநீர் குடிப்பதற்காக இருந்தார். அப்போது சிற்றுண்டிச்சாலைக்குள் புகுந்த நான்குபேர் தினேசைச் சுற்றி வளைப்பதைப்போல நின்று மிரட்டும் தொனியில் விசாரித்தனர். யார் இவர்கள் என்று தெரியாத நிலையில் உங்களுக்கும் எனக்கும் இடையில் என்ன பிரச்சினை என்று கேட்ட தினேஸை மிரட்டி, அவருடைய மேற்சட்டையில் இருந்த கைத் தொலைபேசியை பிடுங்கிச் சென்றுள்ளனர்.  பாவம் அவர்கள் கடையில் சிசிரிவி  கமரா இருப்பதை மறந்து விட்டனர்

இந்தச் சம்பவத்தைக் கண்ட சிற்றுண்டிச் சாலை ஊழியர்கள் முதல் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் திகைத்துப் போய் நின்றனர். சினிமாப்பாணியில் அடாவடியாக நடந்த இவர்களின் இந்தச் செயலினால் பாதிக்கப்பட்ட தினேஸ், உடனடியாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கிறார்.  அப்போது, சிற்றுண்டிச்சாலையிலிருந்த கண்காணிப்புக் கமெராவில் பதிவு செய்யப்பட்டிருந்த காட்சியில் தினேசுடன் அடாவடியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அடையாளம் காணப்பட்டவர், பளை தருமக்கேணிப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரான இவர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நெருக்கமானவர் எனத் தெரியவந்துள்ளது.

குறிந்த இந்த இளைஞர் பாராளுமன்ற  உறுப்பினர் சில மாதங்களுக்கு முன் உயர்தரம் எழுதி விட்டு வெளியேறிய மாணவியை கடத்தினார் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு  தற்போது வழக்கு நடப்பதாகவும் தெரியவருகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo #Kilinochchi

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.