விஷால்: உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு!

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கிளம்பியுள்ள பிரச்சினை தற்போது உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. சங்கத்தின் பூட்டை அகற்றுவது
தொடர்பாக காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக விஷால் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது ஆயிரம் விளக்கு காவல்துறையினர் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். நேற்று இரவு ஏழு மணிக்கு விஷால் விடுவிக்கப்பட்டதும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. சட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்று தெரிவித்திருந்தார். அதன் படி விஷால் தரப்பு இன்று உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாகவும் விஷால் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது தொடர்பாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பு விஷால் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணா முறையிட்டார்.
“விஷால் மீது காவல்துறையினர் உள்நோக்கோடு செயல்பட்டு வருகிறார்கள். ஏற்கெனவே அவர் மீது பொய்யான இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இனி அவரையோ அவரது ஆதரவு தயாரிப்பாளர்களையோ காவல்துறை துன்புறுத்தக்கூடாது. மேலும் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றவேண்டும் ” என்று முறையிட்டார். “விஷால் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்படுவதாகவும் அதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.
இதைத் தொடர்ந்து, விஷால் தரப்பில் மனுதாக்கல் செய்யப்படும் பட்சத்தில் மதியம் 2.15 மணிக்கு மேல் அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo  #Visal

No comments

Powered by Blogger.