பசுமைக்குள் ஒருதுளி புன்னகையை.!

ஏனோ என் எண்ணங்களை சிறைப்பிடித்துள்ளாய்



பரந்து விரிந்த தேசத்தை
நான் காதலிக்க வேண்டும்

பனி படரும் புல்வெளியில்
ஒரு துளி புன்னகை களவாடப்பட்டு விட கோடை உஷ்ணம் ஊற்றெடுத்து மேனியெங்கும் தகிக்கிறது

மீண்டும் மீண்டும் பனித்துளியின் பசுமைக்குள் ஒருதுளி புன்னகையை  தேடிக்கொண்டிருக்கின்றேன்

மீகாமா எனக்கான சுவாசத்தை நீ
பறித்துச் சென்றபின்
உயிரற்ற ஜடத்தால் சிந்திக்க முடியாது தானே சொல்

என் வரிகளுள் உயிர் கொண்டிருந்த உன் மூச்சுக்காற்றின் தாக்கம்
இன்று உயிரற்ற காகிதங்களாக கிறுக்கப்பட்டு இறந்துபோய் கிடக்கிறதே

என் சுவாசத்தை என்னிடமே கொடுத்து என்னை சிறை மீட்டு விடு மீகாமா

நான் கிறுக்கி வீச ஏராளமான உளக்கிடக்கைகள் தகித்துக்கொண்டிருக்கிறது

கற்பனை
எ.எட்வீனா
(தமிழ்நதி)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.