பொன்.ராதா: எஸ்.பிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!

சபரிமலைக்குச் சென்றபோது தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்.பி யதீஷ்
சந்திரா மீது மக்களவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டுவந்து பேசினார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, கேரளாவில் தொடர்ந்து பதற்றம் நிலவியது. அப்பகுதியில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டங்களும் நடத்தின. இதற்கிடையே மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விரதம் இருந்து இருமுடி கட்டி கடந்த நவம்பர் 21ஆம் தேதி சபரிமலைக்கு செல்ல வந்தார். ஆனால், நிலக்கல் பகுதியில் அவரது காரை தடுத்து நிறுத்திய போலீசார் மேற்கொண்டு செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்.
அப்போது அங்கிருந்த ஐ.பி.எஸ். அதிகாரி யதீஷ் சந்திரா மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. பின்னர் பேருந்தில் ஏறி சபரிமலை சென்று வழிபாடு நடத்தி வந்தார்.
இந்த நிலையில் மக்களவையில் இன்று (டிசம்பர் 19) எஸ்.பி யதீஷ் சந்திரா மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டுவந்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
அப்போது பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வழிபட வருகின்றனர். நான் கடந்த 40 வருடங்களாகச் சென்று வருகிறேன். அந்த வகையில் இந்த வருடமும் சபரிமலைக்குச் சென்றேன். என்னுடன் மற்ற பக்தர்களும் வந்திருந்தனர். நாங்கள் நிலக்கல் பகுதிக்கு சென்றபோது எனது வாகனத்தையும் என்னுடன் வந்திருந்தவர்கள் வாகனத்தையும் காவல் துறை தடுத்தி நிறுத்தியது. இதுகுறித்து எஸ்.பி யதீஷ் சந்திராவிடம் கேள்வி எழுப்பினேன். மேலும் நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை, என்னிடம் அலட்சியமாகப் பேசினார். இது இந்த அவையின் உறுப்பினருக்கு நேர்ந்த அவமரியாதை என்றே கருதுகிறேன். வாகனங்களை தடுத்து நிறுத்தியது பக்தர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதுபோன்ற கெடுபிடிகள் தேவையற்றவை. எனவே இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.
இதனைக் கவனத்தில் கொள்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜ

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.