அனைத்துப் பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அனைத்துப் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நுளம்பு பரவும் இடங்களைத் துப்பரவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மீண்டும் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதால், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் நுளம்பு ஒழிப்பு செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தில் நுளம்பு பெருகக்கூடிய 1,302 இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினரால் இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட கள ஆய்வின்போது இந்த இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு அடையாளங் காணப்பட்டுள்ள இடங்களில் 26 வீதமானவை பாடசாலை சூழல் எனவும் 34 வீதமானவை மதவழிபாட்டுத் தளங்கள் எனவும் 49.6 வீதமான இடங்கள் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்கள் எனவும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி செயலணியின் ஒத்துழைப்புடன் கடந்த இரு நாட்களாக 57,657 இடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.