சட்ட விரோத ரிலீஸுக்குத் தடை!
திரையரங்குகளில் வெளியாகவுள்ள மாரி-2 திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வுண்டர்பார் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், “நடிகர் தனுஷ், நடித்துள்ள மாரி-2 திரைப்படத்தை எங்களது நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்த திரைப்படத்தை சட்ட விரோதமாக 16 ஆயிரத்து 135 இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன் இன்று (டிசம்பர் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாரி-2 திரைப்படத்தை சட்டவிரோதமாக 16 ஆயிரத்து 135 இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை