உனை நினைத்தே என் வாழ்க்கை வீணாய்ப் போனதே..!

என் வாழ்வின் உள்ளே வந்தாய்
காதல் மழையை நீயே பொழிந்தாய்
இப்ப வலியை விதைத்து ஏனோ விலகிச் சென்றாய்என் மனதை குடைந்து புகுந்தாய்
எனது இதயம் திருடிக் கொண்டாய்
ஏனோ பிரிவின் வலியை உணர்த்திச் சென்றாய்

வாழ்வில் புது சுகம் தந்தாய்
அன்பின் அர்த்தம் சொன்னாய்
இருந்தும் ஏனோ அன்பை உடைத்துப் போனாய்

வருடங்களும் கடந்து போகுதே
என் ஆயுள் கூட கரைந்து போகுதே
காத்திருப்பும் இன்று வீணாய்ப் போனதே
காலங்களும் மறைந்து செல்லவே-பழைய
ஞாபகங்கள் என்னை மீட்டிக் கொள்ளுதே-கொல்லுதே

உனை நினைத்தே என் வாழ்க்கை வீணாய்ப் போனதே
உனை எண்ணியே என் மனமும்
காயம் கண்டதே
மருந்து இன்றியே என் காதலும்
வலியில் துடிக்குதே
இதனாலே மரணம் எந்தன் கண்ணில் தெரியுதே

நீரின்றி மீன் வாழ முடியுமா
நீயின்றி நான் வாழ முடியுமா
உயிரின்றி உடல் சேர முடியுமா
உடலின்றி சேர்ந்த உள்ளமும் இனி பிரிந்து கொள்ளுமா
அதனாலே என் உயிரும் பிரிந்து போகுமா.

**மோகனன்**

No comments

Powered by Blogger.