பேர்லின் அம்மா உணவகத்தால் முன்னெடுக்கப்பட்ட மனிதநேயம்

மாற்றுத் திறனாளிகளின் தினத்தில் பேர்லின் அம்மா உணவகத்தால் முன்னெடுக்கப்பட்ட மனிதநேயம் மிக்க
தலையாய பணியாக ஒவ்வொரு  தமிழனாக சிரம் தாழ்த்துகின்றோம்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினத்தில் தாயகத்தில் மட்டக்களப்பில்   உதய ஒளி அமைப்பின் ஊடாக 300 க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்  மதிப்பளிக்கப்பட்டத்தோடு   அவர்கள் அனைவருக்கும் மத்திய உணவு வழங்கி  சிறப்பித்தனர். உதய ஒளி சங்கம் 300 க்கும் மேலான அங்கத்தவர்களை கொண்ட ஒரு பதிவுசெய்யப்பட்ட மாற்றுத் திறனாளி அமைப்பாக இயங்கி வருகின்றது. இவ் நிகழ்வுக்கு தேவைப்பட்ட உதவியை பேர்லின் அம்மா உணவகம்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் திரு சுரேஷ் தர்மலிங்கம் அவர்களின்  ஊடாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.எமது மக்களுக்காக போராடி இன்று மாற்றுத்திறனாளிகளாக வாழும் அனைத்து உறவுகளுக்கும் கரம் கொடுக்கும் வகையில் பேர்லின் அம்மா உணவகம் தொடர்ந்து அயராது உழைக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றனர் நிர்வாகம்.

No comments

Powered by Blogger.