கிறிஸ்மஸில் மனதை உருக்கும் விதமாக விற்பனை காட்சி!

 **வி.பிரியா**
இந்த கிறிஸ்மசை அர்த்தப்படுத்தலாமே
முன் காண்கிற தேவையுள்ள சக மனிதக் கண்களின் கைகளில் அன்பின் பரிசொன்றைக் கொடுத்து அந்தக்
கண்கள் மகிழ்ச்சியிலும் நன்றியிலும் நிறைந்து நிற்கிறதைப்பார்ப்பது எல்லா வானவேடிக்கைகள் வெடிப்பதைப் பார்க்கிலும் கொண்டாட்டமானதில்லையா ?
ஒரு வருடம் முழுக்கவும்  ஓடி உழைத்திருக்கிறோம் நமக்காக எதையெதையோ வாங்கி நம் வீட்டையும் நம்மையும் அலங்கரித்திருக்கிறோம்
இது வருடத்தின் இறுதி இந்த நாட்களை நிறைவாக்க ஒட்டுமொத்த வாழ்வையுமே அழகாக்கும்படியான ஒரு செயல் கைவிடப்பட்ட ஒடுக்கப்பட்டிருக்கிற விளிம்பு நிலையிலிருக்கிற ஒருவருக்கு ஒரு சொட்டு மகிழ்ச்சியையாவது கொடுத்துவிடுவது
வெளியின் அலங்காரங்களும் தோரணங்களும் விற்பனைகளும் பண்டிகைக்காலத்தின் கொண்டாட்டத்தை காட்டுகிறது .
அதே பண்டிகைக்காலம் தான் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திலே இருக்கிற குழந்தைகளுக்கும் .
நமது புத்தாடைகளும் பட்டாசுகளும் மின்னொளிகளும் அந்தப் பிள்ளைகளுக்கு தங்கள் தாயையோ தந்தையையோ அவர்களோடு கொண்டாடிய கொண்டாட்டங்களையோ ஒரு சேர நினைவுபடுத்தி அழுகையையும் ஏக்கத்தையும் உண்டு பண்ணலாம்
முதியோர் இல்லங்களில் பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் மண்டைக்குள்ளே ஆயிரம் சொற்களின் இரைச்சலோடு அன்றாடம் போராடுகிற நம் போல் பலரின் தாத்தா பாட்டிக்கு கூட இது பண்டிகைக்காலம் தான்
இந்தக் காலங்களில் மேல் சொன்ன எல்லாக் கண்களும் யாரோ ஒருவருக்காகவும் ஏதோ ஒன்றுக்காகவும் வாசலைப்பார்த்து வாஞ்சையோடு காத்திருக்கும்
நாங்கள் நண்பர்கள் குழாமாக இணைந்து அவர்களுக்கான பரிசுப்பொருட்களை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இந்த அன்பின் சந்திப்பில் உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டுமென யாரேனும் நினைத்தால் உங்களுடன் #Rj #Priya Vincent peris இன்பாக்ஸ் செய்யவும்
இது அன்பின் பண்டிகை ஒளியின் பண்டிகை பகிர்தலின் பண்டிகை
இதை அர்த்தப்படுத்துவோம்

No comments

Powered by Blogger.