த்ரிஷாவின் ‘ஆஹா கல்யாணம்’!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் பேட்ட படத்தில் ஆஹா கல்யாணம் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.

த்ரிஷா திரையுலகில் கதாநாயகியாக 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். முதன்முறையாக ரஜினியுடன் அவர் நடிக்கும் பேட்ட படத்தில் அவரது கதாபாத்திரம் என்ன, திரையில் இருவருக்குமான பொருத்தம் எப்படி இருக்கும் எனப் பல கேள்விகள் எழுந்தன. ஏற்கெனவே படக்குழு வெளியிட்ட போஸ்டரில் முறுக்கு மீசையுடன் ரஜினி ஊஞ்சலில் த்ரிஷாவை ஆட்டிவிடுவது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. தற்போது வெளியாகியுள்ள லிரிக்கல் வீடியோவில் இருவருக்குமான காட்சிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
“மருதாணி வைச்சது யாரு
கையெல்லாம் சிவக்குது பாரு
பச்சை இலை பந்திய போட்டா
மொத்த சனமும் தேடுது சோறு
பங்காளி சண்டையை பாரு
பத்தாது கோட்டரு பீரு
ஏதாச்சும் சொல்லிடும் ஊரு
கல்யாணத்தை பண்ணிப் பாரு”
என்ற இந்தப் பாடலை கு.கார்த்திக் எழுதியுள்ளார். அனிருத் இசையில் அந்தோணி தாசன் பாடியுள்ளார்.
த்ரிஷா நடிப்பில் பேட்ட படத்தைத் தொடர்ந்து கர்ஜனை, சதுரங்கவேட்டை 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதைத் தொடர்ந்து அவர் ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். இந்தத் தகவலை அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.