உறவைப் பிரிக்கும் காய்?

பேரிக்காய்கள் பற்றி:
1. உலகில் ஏறத்தாழ 300 வகை பேரிக்காய்கள் உள்ளன.

2. பேரிக்காய்கள் ஆசியா, ஐரோப்பாவில் முதன்முதலில் தோன்றியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
3. ஐரோப்பாவிற்குப் புகையிலை வரும் முன், பேரிக்காய் இலைகளே புகைக்கப்பட்டுள்ளன.
4. பேரிக்காயின் வரலாறு ஏறத்தாழ கி.மு.1000 வரை செல்கிறது!
5. பேரிக்காய் மரத்தின் மரக்கட்டை இசைக் கருவிகள் தயாரிக்கவும், மரப்பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
6. பேரிக்காய் மரங்கள் 39-49 அடி வரை வளரக்கூடியவை.
7. பேரிக்காய் மலர்கள் வெள்ளை அல்லது பிங்க் நிறத்தில் இருக்கும்.
8. சீன நாட்டில் பேரிக்காயை ஒருவருடன் பகிர்ந்துகொண்டால் அவருடனான உறவில் சலனம் ஏற்படும் என்று நம்பப்படுகிறதாம்!
9. பேரிக்காய் மரம் விளையத் தொடங்கிய நான்கு ஆண்டுகளில் காய்க்கத் தொடங்குகிறது.
10. பேரிக்காய் மரங்கள் 10-50 ஆண்டுகள் வரை வாழும்.
- ஆஸிஃபா

No comments

Powered by Blogger.