காவல்நிலையத்தில் மர்மமாக உயிரிழந்த மாற்றுத் திறனாளி!

சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.


சில நாட்களுக்கு முன்பு பிராட்வே பகுதியில் இரண்டு லட்சம் ரூபாயும், எட்டு சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ நகரைச் சேர்ந்த ஜெயகுமார், விக்னேஷ், அஜித் ஆகியோர் விசாரணைக்காக எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். விசாரணையின்போது ஜெயகுமார் காவல்நிலையத்தில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் சிகிச்சைக்காக ஜெயகுமார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அப்போது, ஏற்கெனவே ஜெயகுமார் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜெயகுமார் மரணமடைந்த விவரமறிந்த அவரது குடும்பத்தினரும், உறவினரும் எஸ்பிளனேடு காவல்நிலையம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். ஜெயகுமார் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், உரிய முறையில் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விசாரணையின்போது ஜெயகுமாரை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

இந்நிலையில், அஜித், விக்னேஷ் ஆகியோரின் உறவினர்களும் காவல்நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் இருவரையும் உடனே விடுவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில், ஜெயகுமார் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை  (டிசம்பர் 22) காலை தொடங்கியது.மேலும், எஸ்பிளனேடு காவல் ஆய்வாளர் குணசேகரனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.