அபாயத்தில் காவிரி டெல்டா

கடல்நீர் மட்ட உயர்வால் காவிரி உள்ளிட்ட கிழக்கு இந்தியாவின் டெல்டா பகுதிகள் அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என அரசு எச்சரித்துள்ளது.


உலக வெப்பமயமாதலின் விளைவாக இந்நூற்றாண்டின் இறுதிக்குள் இந்திய கடற்கரைப் பகுதிகளில் கடல்நீர் மட்டம் 3.5 அங்குலம் முதல் 34 அங்குலம் (2.8 அடி) வரை உயர வாய்ப்புள்ளதாகவும், மும்பை உட்பட மேற்கு கடலோரப் பகுதிகளும், கிழக்கு இந்தியாவின் முக்கிய டெல்டா பகுதிகளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள இந்திய கடல்சார் விவரச் சேவைகள் மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், மும்பை மற்றும் இதர மேற்கு கடலோர பகுதிகள், காம்பாட், கட்ச், கொன்கன் பகுதிகள், தெற்கு கேரளா போன்ற பகுதிகள் மிகவும் ஆபத்தில் இருப்பதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

கடல் நீர் மட்டம் உயர்ந்தால் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பில் நேரடி தாக்கம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் நதியோர நீர் நிலைகளை நம்பியே உள்ளது. மேலும், அடிக்கடி வானிலை மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதால் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். தண்ணீருக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2050ஆம் ஆண்டுக்குள் மத்திய இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் அதிகளவில் நீர் விநியோக சிக்கல்கள் ஏற்படும் என்று யுனெஸ்கோ நடப்பு ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. கங்கா, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, மகாநதி உள்ளிட்ட டெல்டா பகுதிகள் அதிக அச்சுறுத்தல்களுக்கு ஆளாகலாம் என அரசு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film

No comments

Powered by Blogger.