தமிழ் சினிமா 2018: மார்ச், ஏப்ரல், மே கலெக்‌ஷன்!

இராமானுஜம்
தமிழ்த் திரைப்பட உலகில் டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் -தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்ட கட்டண பிரச்சினை காரணமாக தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படவில்லை.


மார்ச் மாதத்தில் யாழ், தாராவி என இரு படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. ஏப்ரல் மாதம் 20ம் தேதிக்குப் பின் ஐந்து படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் கீழ்க்கண்ட படங்கள் ரிலீஸ் ஆகின

தாராவி, மெர்க்குரி, முந்தல், பாடம், தியா, பக்கா, சில சமயங்களில், அலைபேசி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து காத்திருப்போர் பட்டியல், இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை, நடிகையர் திலகம், 6 முதல் 6, பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, காதலர்கள் வாலிபர் சங்கம், 18.05.2009, செயல், பால்காரி, அபியும் அனுவும், ஒரு குப்பைக் கதை, பேய் இருக்கா இல்லையா, புதிய புரூஸ்லி , செம, காலக் கூத்து.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெளியான படங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த மெர்குரி , ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தியா இவ்விரு படங்கள் மட்டுமே தமிழ்நாடு முழுவதும் வெளியானது.

மெர்க்குரி படம் பாக்ஸ் ஆபீஸில் முதலுக்கு மோசம் இன்றி தயாரிப்பாளருக்கு வசூல் மூலம் வருமானத்தை பெற்றுக் கொடுத்தது. மற்ற 6 படங்களும் வசூல் ரீதியாக தோல்விப் படங்களே. மே மாதம் வெளியான 20 படங்களில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இருமடங்கு லாபம் கொடுத்தது இருட்டு அறையில் முரட்டுக்குத்து.

தோல்விகளைச் சந்தித்து வந்த நடிகர் விஷாலுக்கு வெற்றியைக் கொடுத்த இரும்புத்திரை, படைப்பு ரீதியாகப் பாராட்டுகளை பெற்ற நடிகையர் திலகம், ஒரு குப்பைக் கதை, விஜய் ஆண்டணிக்கு தோல்வியைக் கொடுத்த காளி ஆகிய படங்கள் முக்கியமானவை. பிற படங்கள் வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் முடங்கிய படங்களாகும். இப்படங்கள் நிகழ்த்திய வசூல் சாதனையும் - நஷ்டம் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.