அமைச்சரை மிரட்டிய விஜய் ரசிகருக்கு முன் ஜாமீன்!

சர்கார் பட விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் விஜய் ரசிகருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த சர்கார் படத்தில் அரசு வழங்கும் இலவசங்களை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றன. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சர்கார் படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்பு திரண்ட அதிமுகவினர் போராட்டம் நடத்தி, பேனர்களை கிழித்து எறிந்தனர். இதனால், மக்களுக்கு இலவசங்கள் தேவையா இல்லையா என ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் எழுந்தன. இதன்பின்னர் சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழுவினர் நீக்கிய பிறகு படம் திரையிடப்பட்டது. விளைவாக சர்ச்சையும் முடிவுக்கு வந்தது.

சர்கார் படத்தில் காட்சிகளை நீக்குமாறு அதிமுகவினர் போராட்டம் நடத்தியபோதும், பேனர்களை கிழித்து எறிந்தபோதும் பட்டாபிராமைச் சேர்ந்த லிங்கதுரை என்ற விஜய் ரசிகர் தமிழக சட்டத் துறை அமைச்சரான சி.வி.சண்முகத்திற்கு வாட்சப் வழியாக மிரட்டல் விடுத்ததாக புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி லிங்கதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (டிசம்பர் 22) விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது லிங்கதுரைக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film

No comments

Powered by Blogger.