போதநாயகியின் 90 ஆவது நாள் நினைவஞ்சலி

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் அமரர் போதநாயகி நடராசாவின் 90ஆவது நாள் நினைவஞ்சலி வவுனியாவிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இ்டம்பெற்றது.


கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரான வவுனியா, ஆசிக்குளத்தைச் சேர்ந்த திருமதி போதநாயகி செந்துரன் (வயது-29) என்ற கர்ப்பிணி பெண் கடந்த செப்ரெம்பர் 20ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.அவரது உயிரிழப்பில் மர்மம் நீடிக்கும் நிலையில் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் இறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் போதநாயகி நடராசாவின் 90ஆவது நினைவு நாள் இன்றாகும்.

அதனை முன்னிட்டு வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.நிகழ்வில் போதநாயகியின் குடும்பத்துடன் பெண்கள் அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோராதலிங்கம், முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போதநாயகி நடராசாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி நினைவஞ்சலி உரைகள் இடம்பெற்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

No comments

Powered by Blogger.