சாவகச்சேரி பொலிஸார் 5 உழவு இயந்திரங்கள், பாரவூர்தி என்பன மீட்பு

கடந்த நான்கு நாள்களுக்குள் மணல் மற்றும் மரக்கடத்தல்களில் ஈடுபட்ட ஐந்து உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு பாரவூர்தி என்பவற்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


“தனங்கிளப்பு பகுதியில் இருந்து நுணாவிலுக்கு நான்கு உழவியந்திரங்களில் வெள்ளை மணல் சட்டவிரோதமாக கடத்தல் இடம்பெறுவதாக எமக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து உடனடியாக செயற்பட்ட நாம் அந்தப் பகுதிக்கு சென்ற போது, பொலிஸாரைக் கண்டு கடத்தல் காரர்கள் உழவு இயந்திரங்களை வீதியில் கைவிட்டு தப்பிச் சென்றனர்.

அதையடுத்து நான்கு உழவு இயந்திரங்களையும் கைப்பற்றி பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன” என்று சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.கே.கோணார தெரிவித்தார்.“அத்துடன், அனுமதிப்பத்திரம் இன்றி பாரவூர்தி மற்றும் உழவு இயந்திரத்தில் கடத்தப்பட்ட மரக்குற்றிகளும் கைப்பைற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட மணல் மற்றும் மரக்குற்றிகள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.அத்துடன், வாகனத்தின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.கே.கோணார தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.