தமிழீழத்தைப் பெறவே ரணிலுக்கு ஆதரவு-தினேஷ் எம்.பி.

விடு­த­லைப்­பு­லி­க­ளின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னால் ஆயுத வழி­யில் பெற முடி­யா­மல் போன தமிழ் ஈழத்தை இரா­ஜ­தந்­திர வழி­யில் பெற­லாம் என்ற நப்­பா­சை­யு­ட­னேயே தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு இரா.சம்­பந்­தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் ஆத­ரவு வழங்­கி­யுள்­ள­னர்.


இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான தினேஸ் குண­வர்த்­தன தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­ததாவது:-

‘‘ரணி­லின் தீவிர விசு­வா­சி­யாக சுமந்­தி­ர­னும், சுமந்­தி­ர­னின் தீவிர விசு­வா­சி­யாக ரணி­லும் உள்­ள­னர். அதை நாடா­ளு­மன்­றத்­தில் நாம் நேரில் கண்­கூ­டா­கப் பார்த்­துள்­ளோம்.

ரணில் தலை­மை­யில் புதிய அர­ச­மைப்பு வரும் என்­றும், வடக்கு – கிழக்கு மாகா­ணங்­கள் மீண்­டும் இணை­யும் என்­றும், கூட்­டாட்சி வழி­யில் தமிழ் ஈழம் மல­ரும் என்­றும் சுமந்­தி­ர­னும் கூட்­ட­மைப்­பின் ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் கனவு காண்­கின்­ற­னர். இந்­தக் கனவு ஒரு­ போ­தும் நன­வா­காது.

ரணில் அர­சின் அமைச்­ச­ரவை நிய­ம­னங்­கள் கூட சம்­பந்­தன் -, சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரின் ஆலோ­ச­னை­யின் பிர­கா­ரம் நடை­பெற்­றன என நாம் அறிந்­தோம்.

நாட்­டில் கடந்த 50 நாள்­க­ளுக்கு மேலாக நீடித்த அர­சி­யல் குழப்­பங்­க­ளுக்கு ரணில், சம்­பந்­தன், சுமந்­தி­ரன் ஆகி­யோரே கார­ணம். அர­சி­யல் குழப்­பங்­க­ளின்­போது எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வியை சம்­பந்­தன் முறைகேடாகப் பயன்படுத்ததியுள்­ளார். தற்­போது அவ­ரின் பத­வி­யும் பறி­போ­யுள்­ளது’’ – என்­றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.