கனடாவில் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த 15 வயது சிறுமி

Pas நகரில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சிறுமி ஒருவர் கடந்த 14ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த சிறுமியின் பெயர் டார்சொ லைனிலி ஹைடன் (15) என தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக பொலிசார் தற்போது 19 வயது இளைஞர் மற்றும் 15 வயது சிறுமியை கைது செய்துள்ளனர்.

இது குறித்து உயிரிழந்த லைனிலியின் சகோதரி செல்சா ஸ்டீலி கூறுகையில், கைது செய்யப்பட்ட இருவரும் லைனிலிக்கு பள்ளிக்கூடம் மூலம் ஏற்கனவே பழக்கமானவர்கள் என கருதுகிறேன்.

மூவரும் சேர்ந்து போதை மருந்துகளை உட்கொண்டிருக்கலாம்.

லைனிலியின் கொலை தொடர்பாக அவர்கள் இருவர் கைது செய்யப்பட்டது நிம்மதியளிக்கிறது என கூறியுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக வேறு யாரையும் தற்போது சந்தேகப்படவில்லை என கூறியுள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo  #canada

No comments

Powered by Blogger.