அமைச்சர் முன்பு அதிமுகவினர் மோதல்!

விளாத்திகுளத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த உமா மகேஸ்வரி, தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து ஆளுநரிடம் கடிதம் அளித்த நிலையில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், விரைவில் இத்தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் பணிகளில் அனைத்துக் கட்சியினரும் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் விளாத்திகுளம் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் புதூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (டிசம்பர் 23) நடைபெற்றது. இதில் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, அதிமுக மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களை அந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன் மற்றும் சின்னப்பன் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர்.அப்போது, அமைச்சரை வரவேற்று பேசுவதற்காக கட்சி நிர்வாகிகளிடம் கடும்போட்டிநிலவியது மேடையில் ஏறியவுடன் ஒரு கோஷ்டியினர் மார்க்கண்டேயனை முதலில் பேச சொல்லுங்கள் என குரல் எழுப்பினர். இதற்கு சின்னப்பன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அவரை பேச அழைக்குமாறு கூறினர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டு அமைச்சர் முன்னிலையிலேயே ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த அமைச்சர் கடம்பூர் ராஜு, மேடையிலிருந்து கீழிறங்கி வந்து இரு பிரிவினரையும் சமாதானம் செய்துவைக்க முயற்சித்தார். காவல் துறையினரும் தலையிடவே, மீண்டும் கூட்டம் தொடங்கியது. ஆனால் மீண்டும் மோதல் ஏற்பட்டதால் கடம்பூர் ராஜு அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 
Powered by Blogger.