பெண்மை என்பது என்ன?

எங்கெங்கு காணினும் சக்தியடா! என்ற பாரதி கூற்றுப்படி சக்தி வடிவாய்த் திகழ்வது பெண்மை.


"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்கிறார் மேடையில் ஆனால் உண்மையில் நடப்பதென்ன பெண்கள் என்றால் ஆண்கள் சொல்லுக்கு அடங்கியே போக வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் ஒன்றுள்ளது அதை யாரும் உணர்ந்திருந்தால் அன்று புரியும் எம் கோபமும் வலியும் மூடக்கொள்கையில் மூள்கிய மூடர்களே!!!! பெண்ணை அவமானப்படுத்த முதல்உன்னை பெற்றவள் ஒரு பெண்ணென ஏன் மறந்தாய் பெண்ணை இழிவு செய்ய முதல் உன் தாயை நினை அது தவறின் உன் பிறப்பின் குற்றம் எனக்கொள் பெண்ணை மதிக்கத்தெரியாதவன் பெரும்பதவி வகித்தாலும் அவன் கீழானவனே மேடையில் பெண் விடுதலை பற்றியும் பெண் சமத்துவம் பற்றியும் பேசுவார் தேர்தலில் வாக்குகளைப் பெற தாய்க்குலம் என்பார் ஆனால் சபையில் பெண்கள் கருத்துக்களை கூற சந்தர்ப்பம் தரார்
என்ன ஒரு கபட நாடகம் ஒட்டு மொத்த பெண்களுமே ஒன்றை உணருங்கள் பெண்களாகிய நாம் எத்துறை சார்ந்து உயரத்தில் இருந்தாலும் எம்மை அடிமை கொள்வதே சில ஆணாதிக்க வாதிகளின் நோக்கம் இதற்கு இனியும் இடமளிக்கப் போகிறோமா?
இன்று எமக்கென்றால் நாளை??????????
பெண்களை கேவலப்படுத்துவது பின் அதற்கான விளக்கம் என்னவென்றால் அரசியலுக்கு வந்தால் இப்படித்தான் நடக்கும் என்கிறார் புரியவில்லை...... அரசியலில் சட்டதிட்டங்களுக்குட்பட்டு மக்களசேவைக்கென தன்னை அர்ப்பணித்த ஒரு பெண்ணை மக்கள் சேவையின் போது கீழ்த்தரமான வார்த்தைப்பிரயோகங்களால் வசை பாடுகின்றார் ஒரு உபதவிசாளர் என்றால் என்ன அர்த்தம் இதை கேட்டால் கட்சி அரசியல் செய்கிறோமாம் விளங்கவில்லை இதன் தார்ப்பரியம்

ஒட்டு மொத்த ஆண்களையும் இங்கே குறை கூறவில்லை குறிப்பிடக் கூடிய வகையினரே பெண்களை வெறும் போகப் பொருளாகவும் தமக்கு கட்டுப்பட்டு தான் எப்போதும் பெண் வாழ வேண்டும் என்ற மமதையிலும் உலவுகின்றனர் பிரதேச சபை உறுப்பினர் என்றும் பாராது நடு வீதியில் வைத்து தன்னுடைய அதிகாரத்தை தவறாக பாவித்துள்ளார் ஒரு உப தவிசாளர். இதை தவறு என்று சபையில் யாரும் ஒரு கருத்துத் தானும் கூறவில்லை அரசியலில் இருக்கும் எமக்கே இந்நிலை என்றால் சாதாரணமான ஒரு பெண்ணின் நிலை??????

 பெண்களே நமது நாட்டின் கண்களாவார்கள் என்றான் ஆனால் இங்கே நடப்பதென்ன எனக்கேட்டால் என் சொல்வேன்

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்!
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்!
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்,
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்றார் ஆனால் அவை எல்லாம் ஏட்டில்தான்

 பெண்களின் நிலை ஒருவகையில் மேம்பட்டிருந்தாலும், இன்னும் நமது சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள் குறைந்த பாடில்லை. தெருக்களிலும், கல்வி நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் மகிழ்வோடும், அமைதியாகவும் இருக்க முடியாது அவதிப்படும் நிலை இன்னும் நீடிப்பது வேதனைக்குரியது. இதெல்லாம் தாண்டி இன்று அரசியலிலும் ஆணாதிக்க வாதிகளால் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றாள் பெண்

பாராளுமன்றத்திலும், மாகாண சபை மற்றும் பிரதேச சபை ஆட்சிகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதில் அரசு படும் பாட்டைப் பார்த்து வேதனை ஏற்படுகிறது.

அந்த நிலையைக் கொண்டு வருவதற்கு ஒவ்வொருவரும் தனது பங்கை அளிக்க வேண்டும். பெண்களுக்குச் சம உரிமை அளிக்கும் மனப்பாங்கு ஏற்பட வேண்டும். பெண்கள் போகப்பொருளே என்ற அருவருப்பான எண்ணம் ஆண்கள் மனங்களிலிருந்து அறவே அகற்றப்பட வேண்டும்.
. பெண்மை உயர்ந்தால், சமுதாயமும் நாடும் உயரும் என்பதை மனதார ஏற்றுக் கொள்ளும் நாள் விரைவில் வரும் அது உறுதி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.