வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பகுதிகளிலுமிருந்து நிவாரணம் !

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து உதவிகள்
வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வட மாகாண ஆளுநரின் ஊடக சந்திப்பொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவோர் கொழும்பில் உள்ள அலுவலகத்திலும், கிளிநொச்சியில் உள்ள ஆளுநர் விடுதியிலும் வழங்க முடியுமென அவர் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் சிறப்பாக செயற்பட்டு மக்களை பாதுகாத்தமை தொடர்பில் அவர்களின் பணியையும் பாராட்டியுள்ளார்.
Powered by Blogger.