கல்லா கட்டும் கனா மங்கும் மாரி - 2

தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகியை முன்னிறுத்தி படம் தயாரிப்பது கத்தி மீது நடப்பதற்கு சமம். கரணம் தப்பினால் மரணம் என்பதால் தயாரிப்பாளர்கள் இது போன்ற
முயற்சியை மேற்கொள்வது இல்லை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் அப்படி ஒரு முயற்சியில் தயாரித்த படம் தான் "கனா ". வெற்றிகரமான நாயகியாக அறியப்படாத ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கனா படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்த படத்திற்கு போட்டியாக திட்டமிட்ட தேதிக்கு முன்னதாக நடிகர் தனுஷ் ரிலீஸ் செய்த படம் மாரி - 2. இதனால் கனா படத்திற்கு தியேட்டர் எண்ணிக்கை குறைவாக கிடைத்தது. மாரி - 2 அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 21) ரிலீஸ் ஆன இவ்விரு படங்களில் மாரி - 2 வசூலில் முன்னிலை வகித்தது. கனா வசூல் கஷ்டமாகவே கடந்து, இன்று நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறத் தொடங்கியிருக்கிறது, திரையரங்குகள், மற்றும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மாரி - 2 வசூல் குறைய தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் சுமார் 13. 68 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது மாரி - 2 என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில்.
கனா முதல் நாள் மாரி ஆர்ப்பாட்டத்தில் வசூல் குறைவாக இருந்தாலும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் படிப்படியாக அதிகரித்து இன்று காலை முதல் நிலை கொண்டுள்ள இப்படம் கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் 4.68 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.