வரவு செலவு திட்டத்தை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்க வேண்டும்

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு
செலவுத் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னைத் தவிர 14 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு தடவைகள் ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்த அரசாங்கத்திற்கு கால நீடிப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
இதற்கு அப்பால் இலங்கை அரசாங்கமும் ஜ.நா மனித உரிமைப் பேரவையும் இணக்கம் தெரிவித்துள்ள விடயங்களைக்கூட அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த மூன்றரை வருட காலம் எதிர்கட்சித் தலைவர் அவருடன் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தையும் ஜ.நா. மனித உரிமைப் பேரவைக்கும் எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை.
அதற்கு மாறாக இன்னும் மூன்றாவது வரவு செலவுத்திட்டத்தில் கூட இந்த இலங்கை அரசாங்கத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் ஆதரவை வழங்கியிருக்கின்றார்கள்.
நான்காவது வரவு செலவுத்திட்டம் தை மாதம் வரவிருக்கின்றது ஆகவே இந்த நான்காவது வரவு செலவுத்திட்டத்தில் கூட பாதுகாப்பிற்கு வழமைபோன்று பெருந்தொகையான நிதியை ஒதுக்கத்தான் போகின்றார்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.