நல்லூர் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட பாதீடு மக்களுக்கானதல்ல

நல்லூர் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட பாதீடு மக்களுக்கானதல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர்
பிரதேசசபை உறுப்பினர் வாசுகி சுதாகரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்களின் ஊடக சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரன்,
“இந்தக் கூட்டம் பாதீட்டுக்கான கூட்டம் போன்று இருக்கவில்லை. வரவு – செலவுத்திட்ட அறிக்கை கூடத் தரப்படவில்லை. மக்களுக்கு சரியான திட்டம் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே நான் இவ்விடயங்களைக் குறிப்பிடுகின்றேன்.
இன்று நிறைவேற்றப்பட்ட பாதீடானது நிர்வாகச் செலவு கூடிய மக்கள் நலன் குறைந்த பாதீடாகவே காணப்படுகிறது. இப்படியான பதீட்டை எப்படி ஆதரித்தார்கள். 1,2,3 எனப் பட்டியலிட்டுள்ளார்கள். அவை என்னவென்று அங்குள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கும் தெரியாது.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், பெரும்பான்மையாக அவர்கள் இருந்ததால் 12 பேராக அதை நிறைவேற்றிவிட்டார்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.