பாலியல் தொல்லை: மேஜர் ஜெனரல் டிஸ்மிஸ்!

நாகலாந்தில் பெண் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மேஜர் ஜெனரலை பணிநீக்கம் செய்ய ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு ராணுவத் தளபதியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு நாகலாந்தில் உள்ள அஸ்ஸாம் ரைபிள்சுக்கு ஐஜியாக நியமிக்கப்பட்டவர் மேஜர் ஜெனரல் எம்.எஸ்.ஜஸ்வால். இவர் கேப்டன் அந்தஸ்தில் இருந்த பெண் அதிகாரி ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை அடுத்து, அவர் அம்பலாவில் உள்ள ராணுவத்திற்கு மாற்றப்பட்டார்.
இது தொடர்பாக, சண்டிகரில் உள்ள மேற்கு மண்டல ராணுவ அலுவலகத்தில் லெப்ட்டினண்ட் ஜெனரல் தலைமையிலான ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
நேற்று (டிசம்பர் 24) இந்திய தண்டனைச் சட்டத்தின் 354வது பிரிவின் கீழ் மற்றும் ராணுவ சட்டப் பிரிவு 69வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, எம்.எஸ்.ஜஸ்வாலைப் பணியிலிருந்து நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ராணுவ தளபதி தலைவர் பிபின் ராவத் உறுதி செய்துள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து மேஜர் ஜெனரல் எம்.எஸ்.ஜஸ்வால் மேல்முறையீடு செய்ய உரிமையுண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.