ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு -மட்டு த.தே.ம.முண்ணனி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 ஆவது நினைவேந்தல்
நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பட்டிப்பளை மனிதநேய காப்பக மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. இணைப்பாளர்   தர்மலிங்கம் சுரேஸ், மட்டு. மாவட்ட கட்சி செயலாளர் க.ஜெகநீதன், கட்சி செயற்பாட்டளர்களான ப.வினோ, சிவலிங்கம் சுதர்சன், எஸ்.தீபன், கவிதாஸ் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்
இதன்போது உயிர்நீத்த அன்னாரின் திருவுருவ படத்திற்கு  மலர்மாலை அணிவித்து, மலர் துாவி, பொதுச்சுடர் ஏற்றி, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் அன்னாரின் நினைவேந்தலையிட்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
Powered by Blogger.