ரஞ்சித் சொய்சா பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (வெள்ளிக்கிழமை) பெல்மதுல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்துள்ளார்.
கொடகவெல் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.