இலங்கை கண்காணிப்பாளர்கள்பங்களாதேஷ் தேர்தலில்!

பங்களாதேஷ் தேர்தலை கண்காணிக்கும் பணியில் இலங்கை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட
ஒன்பது சர்வதேச அமைப்புகள் மற்றும் குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.
பங்களாதேஷின் 11ஆவது ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இதன்போது, 188 சர்வதேச கண்காணிப்பாளர்களும், 56 சர்வதேச ஊடகவியலாளர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை, இந்தியா, அமெரிக்கா, மாலைத்தீவு, மலேசியா, கனடா, பூட்டான், அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சர்வதேச கண்காணிப்பாளர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் ஹஸ்ரட் ஷாஹ் ஜலால் சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.