மீண்டும் வன்னி- இரணைமடுக்குளத்தின் வான்கதவுகளும் திறப்பு!!
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் மீண்டும் தொடர்ச்சியாக மழை
பெய்து வருகின்றது.
இதன் காரணமாக இரணைமடுக்குளத்துக்காக நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகின்றது. அதனால் 9 வான்கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக வரத்து நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.
தற்போது இரனைமடுக்குளத்தின் நீர் மட்டம் 35 அடி 11 அங்குலமாகக் அதிகரித்துக் காணப்படுகின்றது.
தொடரும் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளமையால் இரணைமடுக்குளத்தின் 9 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதில் 5 வான் கதவுகள் 1.5 அடியாகவும் 4 வான்கதவுகள் 6 அங்குலமாகவும் திறக்கப்பட்டுள்ளன.
இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை வெள்ளப்பெருக்குக் காரணமாக பல கிராமங்களின் மக்கள் இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில், மீண்டும் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளது.



.jpeg
)





கருத்துகள் இல்லை