இரு கனேடியர்களையும் சீனா உடனடியாக விடுவிக்க வேண்டும் – பிரதமர்!

கைது செய்து தடுத்து வைத்துள்ள இரண்டு கனேடியர்களையும் சீனா உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ
வலியுறுத்தியுள்ளார்.
மாலி நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட நிலையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ள அவர், கைது செய்யப்பட்டுள்ள அந்த இருவரும் விடுவிக்கப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து கனடா தொடர்ந்தும் சீனாவுடன் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இவ்வாறு கனேடியர்கள் இருவரை சீன அரசாங்கம் கைது செய்து தடுத்து வைத்திருப்பதானது, உலக நாடுகளில் உள்ள மக்களை மிகவும் கவலையடைய வைத்துக்கதாகவும், அதிலும் குறிப்பாக கனேடியர்களை பெரிதும் குழப்பமடைய வைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பாரிய தொழில்நுட்ப நிறுவனமாக ஹூவாவி நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கடந்த முதலாம் திகதி வன்கூவரில் வைத்து கனேடிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்தே குறித்த இந்த இரண்டு கனேடியர்களையும் கைதுசெய்து தடுத்து வைத்துள்ள சீன அதிகாரிகள், அவர்கள் தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுததலாக விளங்குவதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.