புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக அமைக்கப்பட்ட பனி மனிதன்!

கனடாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமியொருவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில், தன்னார்வ
தொண்டாளர்கள் இணைந்து பனி மனிதனை உருவாக்கியுள்ளனர்.
Maika Lefebvre என்ற சிறுமி, மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நத்தார் விடுமுறைகால குதூகலத்தை தவறவிட்ட குறித்த சிறுமிக்கு பனி மனிதனை உருவாக்க வேண்டுமென ஆசை. ஆனாலும், ஒட்டாவாவில் இம்முறை பனிப்பொழிவு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், குறித்த சிறுமியின் கனவை நனவாக்குவதற்காக தன்னார்வ தொண்டாளர்கள் சிலர் இணைந்து பனி மனிதனை உருவாக்கி சிறுமியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
அதிகாலையிலேயே ஒட்டாவாவின் பல பகுதிகளுக்கும் சென்று பனி படிவங்களை சேகரித்துவந்து பனி மனிதனை உருவாக்கி, அவருக்கு ஒரு தொப்பியையும் வைத்தனர். இதனை பார்த்த சிறுமி மைக்காவின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
இந்த நத்தார் காலத்தில் மற்றவரை மகிழ்ச்சிப்படுத்துவது உகந்ததென தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில், பாதிக்கப்பட்ட சிறுமி மைக்காவில் முகத்தில் ஏற்பட்ட புன்னகைக்கு விலையேதும் இல்லையென குறித்த தன்னார்வ தொண்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Powered by Blogger.